என்னவளிடம் பேசியே பலமாதம் ஆகிறது
அலைபேசியில் அழைத்தேன் அவளை
எனைக் காண எப்போது வருவாய் என்றேன்
என்னவளோ! பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனைக் காண, இப்போது இயலாது
நான் குடும்பத்தின் கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும் இருக்கிறேன் என்கிறாள்
நான் எனக்குள்ளே கேட்டுக்கொள்கிறேன்!
என்னை உன் காதலால் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே சூழ்நிலைக் கைதி என்கிறாய்
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல!
அலைபேசியில் அழைத்தேன் அவளை
எனைக் காண எப்போது வருவாய் என்றேன்
என்னவளோ! பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனைக் காண, இப்போது இயலாது
நான் குடும்பத்தின் கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும் இருக்கிறேன் என்கிறாள்
நான் எனக்குள்ளே கேட்டுக்கொள்கிறேன்!
என்னை உன் காதலால் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே சூழ்நிலைக் கைதி என்கிறாய்
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக