செவ்வாய், 31 மே, 2011

"மதுரை" மன்மதனின் ஜனனம் நாள்

மதுரை மண்ணின் மைந்தன்

மதுரை மாநகரின் மன்மதன்

பள்ளி பருவத்திலிருந்தே ஓவியன்

பருவம் வந்ததும் பாவைக் கவிஞன்

கல்லூரிக் கன்னிகளின் காதலன்

அன்னை கல்லூரியின் ஆண்மகன்

அனைத்து பெண்களின் ஆணழகன்

அதனால் தானோ அவன் "பெருங்கவிஞன் "

மே மாதத்தின் கடைமகன்

கோவை பாவையின் மணமகன்

'தமிழ்கவி" யின் உடையவன்

என் போன்றோர்க்கு மூத்தவன்

முத்திர்க்கே அரசவன்.............

எங்கள் மன்மதன்..(முத்தரசு).


இருபதை கழித்து இருபத்தொன்றாம்

ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்

நண்பனுக்கு எனது மனமார்ந்த

பிறந்தநாள் நாள் நல்வாழ்த்துக்கள்.
 
(நண்பர் முத்தரசு அவர்களின் பிறந்தநாள் அன்று உதித்தது)

திங்கள், 30 மே, 2011

தவிர்த்துவிடுங்கள் கவிதைகளிலிருந்து.....!

அம்முவை, பொம்முவை

வான்மதியை, வானத்தை

பூமகளை, மேகத்தை

பூமியை, பூக்களை

மொட்டுகளை

கடலை, அலையை

இரவை, நிலவை

நட்சத்திரத்தை

ஆதவனை, தாமரையை

மலையை, மழையை

கடவுளை, வானவில்லை

அதிகாலையை

அந்திமாலையை

பனித்துளியை

பட்டாம்பூச்சியை

தேனை, மானை, மீனை

மெல்லினத்தை, வல்லினத்தை

அமுதை, அமிர்தை

இவை அனைத்தையும் தவிர்த்துவிடுங்கள்

உங்கள் கவிதைகளிலிருந்து.....

அனைத்தும் தோற்றுப்போய்

துவண்டிருக்கின்றன என்னவளிடம்....!

சனி, 28 மே, 2011

என்னவளின் பின்பங்கள்...!

எதிர்பாராமல் பின்பங்கள் தந்தாய்

என் எதிர்காலம் எதிர்படாமல் போனது

நிகழ் காலம் நிகழாமல் போகிறது

உன் கண்களை நான் கண்ட காலம்

மட்டுமே என் நினைவில்.

வியாழன், 26 மே, 2011

குடிகரரனின் காதல் கவிதை...!

நான் நானாக இருக்கும் போது

வராதா அவளின் ஞாபகம் - நான்

இரண்டாக இருக்கும் பொழுது

அதிகமாகிறது - (தொல்விக்காதல்)


நான் நானாக இருக்கும் போது

வரும் அவளின் ஞாபகம் - நான்

இரண்டாக இருக்கும் பொழுது

மறைந்துவிடுகிறது - (வெற்றிக்காதல்)

புதன், 25 மே, 2011

அதிகாலை எனது அறையினுள் அவள்...!

என் அறை வந்தாள் வரவேற்றேன்!

அருகில் அமர்ந்தாள் வரவேற்றேன்!

நெற்றி தொட்டாள் வரவேற்றேன்!

தலை தடவினாள் வரவேற்றேன்!

என் மார்பு படர்ந்தாள் வரவேற்றேன்!

அவள் இதழ் பதித்தாள் வரவேற்றேன்!

என் இடை பிடித்தாள் வரவேற்றேன்!

பாதம் தடவினாள் வரவேற்றேன்!

தொடை கிள்ளினாள் அழறி எழுந்தேன்...

தேடினேன், அத்தனையும் கனவு.

ஞாயிறு, 22 மே, 2011

எதிபார்ப்பில்லாமல் என்னவளிடம் இருந்து அழைப்பு.....!

மாதக்கணக்கில் காணாமல் போன

என்னவள், இன்று என்னை தானாகவே

முன்வந்து அழைக்கிறாள், கணினியில்....

தற்போது எனக்குள்ளே ஆயிரம்

ரோஜா மொட்டுக்கள் மலர்ந்தது போல

ஒரு உணர்வு, பெருமை உண்டாகிவருகிறது...!

வியாழன், 19 மே, 2011

மிருகத்தை மனிதனாய்........!

மிருகமாய் இருக்கையில் அருகினில் காதலி

பிரிகிறாள் மனிதனாய் மாற்றி.

புதன், 18 மே, 2011

பேரழகியின் தமையன்...!

நட்பிற்கிதயம் தரும் நல்லவனே!

நாகர்கோவில் மன்மதனே!

குமரியின் குடில்மகனே!

குமரிகளின் காவலனே!

பேரழகிகளின் தமையனே!

எனதருமை மைத்துனனே!

நீ என்றும் இன்றுபோல்

நட்புடன் இருப்பாயாக.............!

(எனது நண்பன் "ரதீஸ்" அவர்களுக்காக எழுதியது)

செவ்வாய், 17 மே, 2011

என்னவளின் காவலனாய் இருப்பதிலும் பெருமையே...!

பெண்ணே!

கடலாழத்தில் கண்டெடுக்கப்படும்

அற்ப்புத முத்து அழகிதான்

அவ்வாழலத்தில் இருக்கும் அம்முத்திற்கு....

பாதுகாவலனாய் இருக்கும் சிற்ப்பிக்கே

இத்தனை பெருமை கிடைக்கையில்...


அம்முத்தே முகம் சுழியும் அளவு

பெரும் பேரழகான பெண்மை நீ

இப்பூமியில் இருக்கும் உன்னை

பாதுகாக்கும் காவலனாய் நான்

இருப்பதில் எனக்கு பெருமையே..!

புதன், 11 மே, 2011

அலைபேசியில் அவள்....!

என்னவளிடம் பேசியே பலமாதம் ஆகிறது

அலைபேசியில் அழைத்தேன் அவளை

எனைக் காண எப்போது வருவாய் என்றேன்

என்னவளோ! பெற்றோரிருக்கின்றனர்

என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்

உனைக் காண, இப்போது இயலாது

நான் குடும்பத்தின் கைதியாக இருக்கிறேன்

சூழ்நிலைக் கைதியாகவும் இருக்கிறேன் என்கிறாள்

நான் எனக்குள்ளே கேட்டுக்கொள்கிறேன்!

என்னை உன் காதலால் கைதியாக்கி விட்டு

நீயோ அங்கே சூழ்நிலைக் கைதி என்கிறாய்

இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல!

விபச்சாரி.!

சந்தோசம் என்றால் என்ன என்றே தெரியாதவள்

வந்தவர்க்கெல்லாம் சந்தோசம் தந்தவள்

வெறியர்களால் வேட்டையாடப்படுபவள்

சமூகத்தால் அவமானப்படுபவள்

உயிருள்ளவரை அவளோர் சுமைதாங்கி

உயிரற்றபின் சுமக்க ஆளில்லா அனாதை.

(சிஷ்யை பத்மாவின் கவிதை படித்தவுடன் உதித்தது (shtyle.fm))

திங்கள், 9 மே, 2011

நான் என்ன செய்வேன்...?

சென்றேன், வந்தாள்

பார்த்தேன், பார்த்தாள்

சிரித்தேன், சிரித்தாள்

அழைத்தேன், சீண்டினாள்

அடித்தேன், சிரித்தாள்

அருகில்சென்றேன், அலறினாள்

பொத்தினேன், கத்தினாள்

ஓடினேன், நிறுத்தினாள்

திரும்பினேன், அழைக்கிறாள்

நான் என்ன செய்வேன்?

வெள்ளி, 6 மே, 2011

இளவரசிக்கு வாழ்த்துக்கள் - 26th April

இராஜ்ஜியத்தின் பிறப்பே!

பழங்குடியினர் வாரிசே!

திப்பு சுல்தானின் பரம்பரையே!

நீலகிரியின் நிலவே!

குளு குளு மலையின் தலைநகரமே!

பூக்களின் புகலிடமே!

இன்றைய இளவரசியே!

இனிவரும் இதே நாளுக்குள்

மகராணியாக முடிசூட வாழ்த்துகிறேன்.

நீ பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!

(தோழி ராஜியின் பிறந்தநாள் வாழ்த்து, http://www.shtyle.fm/topic.do?cid=45511&tid=753920 )