செவ்வாய், 29 மார்ச், 2011

தேவதைக்கான(காண) என் காத்திருப்பு.....!

ஒன்றரை மாதங்களாக காத்திருந்தேன்
என் தேவதையின் பின்பங்களை காண..........
தேவதை வந்தபாடில்லை கொடுத்தபாடில்லை
இன்று வந்த தேவதையோ.....!
தந்தேன் எடுத்துக்கொள் என்று கூறினாள்...
ஆவலுடன் திறந்து பார்த்தேன் இல்லை கிடைக்கவில்லை-
வினவினேன்....
பொறுத்திரு என்று கூறினாள் அப்போதும் கிடைக்கவில்லை
கேட்டேன் கெஞ்சினேன் தேவதையை -
தயைக்கமின்றி உடனே கூறினாள்....
இன்று போய் நாளைவா தருகிறேன் என்று.........
நானும் தினமும் வருகிறேன், அப்பவும் சொல்கிறாள்
இன்று போய் நாளைவா என்று - நான்
நாளையும் வருவேன் - ஏன்...?
திருப்பி மாற்றி பேசத்தெரியாத அந்த
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளையை....
என் தேவதையைக் காண.

ஞாயிறு, 27 மார்ச், 2011

நான் தோற்றுப் போவதையே விரும்புகிறேன்.....!

நீ என்னுடன்
போட்டி போடும் போதெல்லாம்
நான் தோற்றுப் போவதையே
விரும்புகிறேன்..!
ஏனெனில்?
நீ எப்போதும்
தோற்கக் கூடாது
என்பது மட்டுமல்ல
எப்போதும் நீ சிரித்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்க்காக..!

திருஓடு.........!

விநாயகன்..! அம்மை அப்பனை சுற்றினான் ஞானப்பழம் கிடைத்தது


முருகன்......! கொல்லிமலையை சுற்றினான் வள்ளியம்மை கிடைத்தது

நானோ........! ஒரு பெண்னுடன் மட்டும் தான் சுற்றினேன்......

                          "திருவோடு கிடைத்தது".

--------என் காதல் கணிணி----------

உயிருள்ளவளால் நிறுத்தப்பட்ட என் நாடித்துடிப்பு
நாடித்துடிப்பில்லாத உன்னால் மீண்டும் உயிர் பெற்றது.

ஞாயிறு, 13 மார்ச், 2011

வெகுநாள் முட்டாள்தன ஆசை..!


என்னவளின் இதழ் பட்டு உறங்கிய நான்...

அவளின் இதழ் பட்டே எழ நினைத்தேன் - முடியவில்லை.....

அதிகாலை எழுந்ததும் புரிந்தது

எனது எண்ணம் தவறென்பது - பின் என்ன..?

நினைவினில் கிடைக்கப் பெற்றவை

கனவினில் கிடைக்கும் என்று என்ணி

உறங்கியது என் தவறுதானே..?

செவ்வாய், 8 மார்ச், 2011

இது ஞாயமா...?

கண்ணெட்டும் தொலைவில்


அவள் இருக்க.........

எனைக் கண்கொள்வால்

காதலிப்பாள் என மணம் ஏங்க...........

அதைக் கவிதையாய் நான்

இங்குரைத்திடும் வேளையில் - அவளோ

காநீர்போல வருவதும்....

கண்கொள்ளாமல்

செல்வதுமாய் இருக்கிறாள்.....

இது ஞாயமா? பொறுக்குமா?

என் இளநெஞ்சம்...!

சொல்.