புதன், 15 ஜூன், 2011

ஆணழகனின் பிறந்தநாள் கவிதை...!

ஆணழகனே!


ரதிகளின் மன்னன் என்பதால் தானோ

ரதீஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்...?


பிரம்மன் படைத்த படைப்புகளின்

சாதனை பட்டியலில் உன் பெயர்தான்

முதலில் இருக்கிறதாம்..!


பிறந்தவுடன் 400கிராமில்

தங்கமானவன்

பத்து மாதத்தில்

3கிலொ முத்து போன்றவன்

ஐந்து வயதில்

பவளம் போன்றவன்

ஆறாம் வயதில்

அறிவுச்செல்வமானவன்

எட்டு வயதில்

என்னவளின் அண்ணனவன்

ஒன்பது வயதில்

ஒப்பனை பூசத் தொடங்கியவன்

பத்து வயதில்

உலகப்பாடம் சொன்னவன்

பதினைந்து வயதில் உயர்

பள்ளியின் முதியவன்

பதினேழாம் வயதில்

பள்ளியின் முதலாமவன்

பத்தொன்பது வயதில்

கல்லூரியின் ஆணழகன்

பருவத்தின் வயதில்

இளைங்கைகளின் இளவரசன்

இவையெல்லாம் இல்லாதுபோல்

பண்பிலே அன்பிலே குணத்திலே

நல்லவனாய் வல்லவனாய் வித்தகனாய்

அரபு நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும்

இவனைப்போல இன்னும் நூறு மலர்கள் மலரட்டும்

நாறும் உலகம் சிறக்கட்டும்...

எங்கள் ஆணழகன்(ரதீஸ்)

மேலும் பல வெற்றிப் படிகளேறி

சாதனை மலர்கள் பறிக்கட்டும்

நூறு வயதுவரை வாழட்டும்

நாளைய உலகமும் மகிழட்டும்

என்று.......

நண்பனை நான் வாழ்த்துகிறேன்...!

இப்படிக்கு,

வளமும் நலனும் கிட்ட பிரார்த்திக்கும் மச்சி(னன்)

பீ.அப்துல் சப்பார் சாதிக்.

(("ஜூன் 14") எனது நண்பன் "ரதீஸ்" அவர்களின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை)

என் இதயம் வலிக்கிறதே...!

ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்

ஒரு கணத்தில் தோற்றதும் ஏனோ

ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்

ஒரு பிழையில் சரிந்ததும் ஏனோ

வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்

தேய்பிறையில் ஒழிந்ததும் ஏனோ

என் இதயம் வலிக்கிறதே...!