சனி, 9 ஏப்ரல், 2011

மாற்று தேசத்தில் வசிக்கும் தமிழ் அழகியே...!

நீள வாங்கேடுத்து, நெற்றிக் குங்குமமிட்டு

நடு நெற்றிப் போட்டும் வைத்து

அழைக்கும் மடலில் ஆடும் கம்மலிட்டு

விழியில் புன்னகையும், வாயிற் முனகளுடனும்

சங்குக் கழுத்தினிலே சாஸ்திரம் கெடாமல்

தங்கத் தாலியிட்டு, தலை குனிந்து, தரை தட்ட

பட்டுப்புடவை கட்டி பல்லானவை வெளிக்காட்டி

நான் வரும் வேளையிலே...!

வரிக்குதிரை போல் எனைக்கடந்து செல்லும்

மாற்று தேசத்தில் வசிக்கும் தமிழ் அழகியே!

நீ வாழ்க! உன்னவனுடன் பல்லாண்டு

பல்லாண்டு நீ வாழ்க! என வாழ்த்துகிறேன்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

(சிசு) பெற்றெடுத்தவளின் காதல்...!

நீள வாங்கேடுத்து, நெற்றிக் குங்குமமிட்டு

அழைக்கும் மடலில் ஆடும் கம்மலிட்டு

சிவந்த மூக்கினிலே சிறிய தங்கம் இட்டு

விழியில் புன்னகையும், வாயிற் முனகளுடனும்

பட்டுப்புடவை கட்டி பல்லானவை வெளிக்காட்டி

தன் அடிவயிர்த் தழும்புகளை தானே தடவியபடி

அதை நான் காண வேண்டுமென்று...........

வரிக்குதிரை போல் எனைக்கடந்து செல்லும்

வளைகுடா வாழ்மகளே.........!

நீ உன்னவனுடன்

வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

என்னவளின் அழகு..........!

சுண்டி இழுக்கும் கண்கள்

முத்தமிட தூண்டும் மூக்கு

கவ்வத் தூண்டும் காது

கடிக்க தூண்டும் கழுத்து

உருஞ்ச தூண்டும் உதடு

அணைக்க தூண்டும் கைகள்

கிள்ள தூண்டும் இடுப்பு -அதனிலும்

இரண்டு மடிப்பு

தட்ட தூண்டும் பிரமுதுகு

தவள தூண்டும் மடிகள்

தங்கிவிடத் தூண்டும் இதயம்

இவை அனைத்தும் பார்க்கபெற்ற நான்

கிடைக்கப்பெருமாகின் - பாக்கியசாலியே!