திங்கள், 29 மார்ச், 2010

உன் மௌனப் புன்னகைக்கு முன்...!

பேசா மடந்தையாகி விட்ட
உன்னைப் பேச வைக்க
உன்னிடம் என்னென்னவோ பேசுகிறேன்…
பதிலுக்கு நீ மௌனத்தை
பரிசாகத் தருகிறாய்…
உனை என்னிடம் பேச வைக்க
பகீரதப் பிரயத்தனங்களை
செய்து பார்க்கிறேன்…
பதிலுக்கு உன் மௌனப் புன்னகையை
பரிசாகத் தருகிறாய்..!
அந்த மௌனப் புன்னகைக்கு முன்
என் அத்துனை முயற்சிகளும்
ஆயுள் இழந்து விட்டன என்பதை
பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறேன்..!
இப்போதாவது பேசு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக