ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சித்தப்ப பித்தனின் வாழ்த்துக்கள்....!


சித்தப்ப பித்தனின் வாழ்த்துக்கள்....!
------------------------------------------------------------
 (உண்மையான பின்பம் இது)

இப்புவியில் அழகான
வெண்ணிலவின் பிறந்த நாள்
ஒவ்வொரு மாதமும் வரும்..!
ஆனால் சித்திரையில்
பிறக்கும் வெண்ணிலவுக்கோ
ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்தநாள் வரும்..!
அது போலே
அச்சித்திரையில் பிறந்த
(வி)சித்திர நிலவே..!
காதல் முத்திரையால்
என் அண்ணன் நித்திரையை கொள்ளையிடப்
பிறந்த என்ண்ணனின் மன்னவனே..!
நீ பிறந்த இந்நாளில்
உன்னைப் பெற்றோர்க்கு
மகிழ்ச்சியோ இல்லையோ..?
என்னை சித்தப்பனாக்கி நீ பிறந்திருக்கிறாய்
என்பதைக் கண்டு
எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்..!
உனைக் கொஞ்சி மகிழ விரைவில் வருகிறேன்..!
இனியவன் புத்தாண்டின் புதியவன் உனக்கிந்த
சித்தப்ப பித்தனின் பிரியமான
வாழ்த்துக்கள்...!

(பொடியன் சப்பார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக