ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

அண்ணன் மவனே வாடா...!

அண்ணன் மவனே வாடா...!

இருளைக் கிழித்துப் பிறந்த
அண்ணனின் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் அண்ணாவின் மகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
அண்ணன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் சித்தப்பனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் குல முதல் சந்ததியடா…

உன்னால் இங்கு
உன் சித்தப்பன் உள்ளம் பூரித்து
சிரிக்கிறேன் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறேன்..!
எத்தனை முறை நான் 
எழுதிப் பார்த்தும்
உன்னைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறேன்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

(பொடியன் சப்பார்)

இன்று எனதுஅண்ணன் ராஜா அண்ணி சோபி தம்பதிக்கு ஆண்மகன் பிறந்திருக்கிறது. அம்மகனின் வரவிற்க்காக இக்கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக