கூவும் குரல் வளம் (என்) அவள்.....!
தவற விட்டதை தடவி எடுத்து
இண்டர்நெட்டிலே கடிதம் அனுப்பி
செல்பேசியில் அவளை அழைத்து
முதல் முறையாய் குரலை கேட்டு
அசந்து பேச மறந்து இருந்து
ஆசைகளை சொடுக்க மறந்து
அன்பாலே பேசி முடித்து
அவள் குரலை குறை சொல்லி
நிறை சொல்ல வந்தேன் இங்கு.
கூவும் குரல் வளம் அவள்
கொஞ்சும் மழலை உள்ளம்
நகைச்சுவை பேச்சுரிமை
சாதுர்ய நா வளம்
அனைத்தும் உணர்ந்தேன்
அவள் குரலில்.....!
பொடியன்(சப்பார்)