ஒரு பெண்ணின் கடைசி கண்ணீர்..!
நல்லவனாய் வந்தாய்..
நண்பன் ஆனாய்
ஒளியாய் நின்றாய்
வழியாய் வாழ்ந்து காட்டினாய்
என் கரம் பிடித்து காதலும் கொண்டாய்
வாழ்க்கையில் வழி அறியா எம்மை
வழி அறியச்செய்தாய் என் காதலா.
வன்முறை ஏதும் இன்றி
வாழ்வோம் என்றாய்
நம்பினேன் ஒப்படைத்தேன்
ஓர் இனம் நம்மை வெறுக்க
ஓடினோம் தொலைவினில்
வாழ்ந்தோம் நாட்களில்
வாழ்வில் ஒன்று சேரா நம் இனம்...
சேர்ந்தது உடனே நம்மை பிரிக்க.
அவ்வினம் வலை விரிக்க
நம்பி வீழ்ந்தோமே என் கணவா...
உன்னை பிரிந்த அந்நாள் முதல்
தொலைத்தேன் என் உணவை
கூடவே என் உறக்கத்தையும்..
உண்மைதான் கணவா உயிர்
உள்ள பிணமாக உனைநினைத்து
உருகி கொண்டிருக்கிறேன்..
நாம் வாழ்ந்த வாழ்க்கை
உண்மைதான் என் மன்னவா
நான் என்றுமே உன் அன்புக்கு
அடிமைதான் என் மணவாளா..
நாம் பிரிந்தால் இறப்பேன் என்றாய்
நாம் பிரிந்தால் இறப்பேன் என்றாய்
நாம் பிரியவிட்டால் இறப்பான்
என்றார்களே என் இனத்தார்கள்.
என்னவன் இறப்பை காண
என்னால் இயலாது - ஆதலால்
கொடுத்துவிட்டேன் எமனிடம் என்னையே..!
உன் தாலி இல்லாமல்
உயிர் வாழ இயழாமல்
எமனோடு செல்கிறேன்.. எனை
எமனோடு செல்கிறேன்.. எனை
பின்தொடராதே என் கணவா...!
இது என் மேல் ஆணை....
ஏமாற்றி விட்டேன் என்று
எண்ணிவிடாதே அன்புக்காதலா..
உண்மையில் இங்கு ஏமார்ந்து-
போனது இந்தப் பாவி தான்.
பொடியன்...!
சோகம் நிறைந்த கவிதை. மிகவும் அருமை.
பதிலளிநீக்குmikka nandri thendral..
நீக்கு