மழைத்துளியின்
சாரல் பூக்கள்...
மழலையின்
சிரிப்பைக் காட்டுகிறது..!
மேகங்களின்
மின்னல் பூக்களோ
உன் சிரிப்பைக் காட்டுகிறது..!
சாரல் பூக்களை ரசித்தால்
என் துக்கத்திற்கு ஆபத்து
என்பதைக் கண்டேன்..!
மின்னலை ரசித்தால்
அது என் கண்ணுக்கு
ஆபத்து என்பதை
உனைக் கண்டதும்(தான்)
கண்டு கொண்டேன்..!
தமிழர்களுடைய காதல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வலைப்பதிவினை உருவாக்கும் முயற்ச்சிக்கான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இங்கே.....
வெள்ளி, 29 அக்டோபர், 2010
திங்கள், 25 அக்டோபர், 2010
என்ன நோயடி இது....?
எங்கு திரும்பினாலும்
எதிரில் நீயாகவே தெரிகிறாய்..!
யாருடன் பேசினாலும்
எதிரில் நீ பேசுவதாகவே தெரிகிறாய்..!
நான் எங்கு சென்றாலும்
நிழல் போல் என்னுடன்
நீயும் வருவதாகவே தெரிகிறாய்..!
என்ன நோயடி இது..?
உலகமே மறந்து போய்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு உலகமாகி இருக்கிறது..!
எதிரில் நீயாகவே தெரிகிறாய்..!
யாருடன் பேசினாலும்
எதிரில் நீ பேசுவதாகவே தெரிகிறாய்..!
நான் எங்கு சென்றாலும்
நிழல் போல் என்னுடன்
நீயும் வருவதாகவே தெரிகிறாய்..!
என்ன நோயடி இது..?
உலகமே மறந்து போய்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு உலகமாகி இருக்கிறது..!
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
கண்ணா மூச்சி ஆட்டம்...!!
கண்களை கட்டி விட்டவளோ!!
ஓடிக் கொண்டுதான் இருக்கிறாள்...!
கண்களை மூடிய வனோ.!!
தேடிக் கொண்டுதான் இருக்கிறான்...!
ஆனால்..??? அவன் வாழ்க்கை
இன்னும் இருட்டில் தான்.
ஓடிக் கொண்டுதான் இருக்கிறாள்...!
கண்களை மூடிய வனோ.!!
தேடிக் கொண்டுதான் இருக்கிறான்...!
ஆனால்..??? அவன் வாழ்க்கை
இன்னும் இருட்டில் தான்.
சனி, 23 அக்டோபர், 2010
வள்ளலிடம் கஞ்சத்தனம்...!
உன் செவ்விதழ் திறந்து பேசுவதில்…
நீ வள்ளல் என்பதை
ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களை மூடி
எனக்கொரு முத்தமிடு…
என்றால் மட்டும்
கொடுக்க மாட்டேன் என
கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம்
கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழக்கையே..!
நீ வள்ளல் என்பதை
ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களை மூடி
எனக்கொரு முத்தமிடு…
என்றால் மட்டும்
கொடுக்க மாட்டேன் என
கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம்
கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழக்கையே..!
செவ்வாய், 19 அக்டோபர், 2010
நீ இல்லாவிட்டால்...!
உன் அருகாமை…
என்னை மலர வைக்கிறது..!
உன் கொஞ்சல்…
என்னை உளற வைக்கிறது..!
உன் பார்வை…
என்னை கிறங்க வைக்கிறது..!
உன் புன்னகை…
என்னை மயங்க வைக்கிறது..!
உன் தீண்டல்
என்னை உறைய வைக்கிறது..!
மொத்தத்தில்
நீ இல்லாவிட்டால்
என் இதயம் இயங்க மறுக்கிறது..!
என்னை மலர வைக்கிறது..!
உன் கொஞ்சல்…
என்னை உளற வைக்கிறது..!
உன் பார்வை…
என்னை கிறங்க வைக்கிறது..!
உன் புன்னகை…
என்னை மயங்க வைக்கிறது..!
உன் தீண்டல்
என்னை உறைய வைக்கிறது..!
மொத்தத்தில்
நீ இல்லாவிட்டால்
என் இதயம் இயங்க மறுக்கிறது..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)