க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே......!
காவேரியில் பொறந்தவளே...
கில்லி விளையாண்டு
கீழே விழுந்தவளே...
குற்றம் ஏதும் இல்லா
கூரையின் கீழ் வாழ்பவளே...
கெட்டெண்ணம் ஏதும் செய்யா
கேடும் விளையாதவளே...
கை கால் உழைப்பை நம்பி
கொட்டும் மழையினிலும்
கோடி நன்மை செய்பவளே...
கௌரவத்துடனே நீ வாழனும் நூறாண்டு.
பொடியன்.