எவராலும் மறக்க முடியா காலம்...? கல்லூரி...!
(படபடப்பு தவிர், ஆர்வம் கொள்)
உன் பள்ளி வாழ்க்கை முடிந்து,
கல்லூரியில் காலடி வைக்கும்
நாள் நாளை வந்து விட்டது.
கல்லூரியில் முதல் நாள் - உமக்கு
ஒரு சுவையான அனுபவம் ஆகும்.
ஏட்டுக் கல்வியை மட்டுமில்லாமல்,
அனுபவக் கல்வியையும் பயிற்றுவிக்கும்
இடம் தான் கல்லூரி.
சுவர்களில்,நாற்காலியில் பெயர் கிறுக்குவது
வாய் விட்டுக் கதறி அழுகும் தருணம்
மனம் விட்டு மகிழும் தருணம்
நேரிடக்கூடும் இடம் தான் கல்லூரி
எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும்
முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும்
கார் ஒட்டி வாங்கி வரும் தழும்புகழும்
பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும்
முதல் எதிர்ப்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும்
சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும்
கிடைக்கும் அனுபவம் கல்லூரிதான்.
பிறகு நினைத்துப் பார்க்கையில்...
சிரிப்பை வரவழைக்கும், கண்ணீரை
மௌனமாகக் கண்ணோரம் வரவழைக்கும்.
இப்படி எல்லாம் சேர்ந்த, நிறைந்த
கல்லூரி வாழ்க்கையின் மறக்க முடியா
நினைவுகள் கிடைக்கபெருவதர்க்காக
முதல் நாள், இம்மாத முதல் திங்களில்(04.07.2011)
முதல் அடியெடுத்துவைக்க இருக்கும்
அன்பு சிஷ்யையே!(பத்மா) - உமக்கு
எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக